This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Sunday, March 5, 2017
எட்டை ஒன்றாக்கிய மத்திய பாஜக ஆட்சி... தொழிலாளர்களை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு... கே.விஜயன் ****************************************************தமிழகத்தில் சிறிய தொழிற்சாலைகள் 7 லட்சத்திற்கும் அதிகமாகவும் பெரிய தொழிற்சாலைகள் 42 ஆயிரம் எண்ணிக்கைஅளவிலும் உள்ளன. இதில் பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரி யும் தொழிலாளர்கள், நிரந்தரமான தொழி லாளர்கள் சில சலுகைகளைப் பெற்று வரு கின்றார்கள்.இங்கு எந்தவித சலுகையும் இல்லாததொழிலாளர்களாக ஒப்பந்தத் தொழி லாளர்கள் உள்ளனர்.சமவேலைக்கு சம ஊதியம், கேண்டீன், பஞ்சப்படி என்று எதுவும் இந்த தொழிலாளர்களுக்கு தெரியாது. அதேபோன்று சிறிய தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமோ மிகக் குறைவு. சில பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகக் கூட வழங்கப்படுகின்றது. இடம்பெயருதல் சட்டம் இது அல்லாமல் வெளி மாநிலத் தொழிலாளர்கள் எந்தவித கணக்கும் இன்றி தொழிற்சாலைகளில் வேலைசெய்கின்றனர். சிறிய பெரிய தொழிற்சாலை என்று வித்தியாசமில்லாமல் அனைத்து விதமான பகுதிகளிலும் வெளிமாநிலத்தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர்.இந்த வெளிமாநிலத் தொழிலாளிகள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதைஎவ்வாறு கணக்கிட முடியும். தொழிற்சாலைகளில் எந்த தொழிலாளர் களைப்பயன்படுத்தினாலும் அந்த தொழி லாளர்களைப்பயன்படுத்துவதற்கு அனுமதி பெறுவதற்கு விவரங்கள் தொழிற்சா லைத்துறைக்கு அளித்திடவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து வேலைவாங்குவது என்றால் அதை ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970இன்படி பதிவு செய்யப்படவேண்டும்.20 மற்றும் அதற்கு மேல் தொழிலாளர்களைப் பயன்படுத்தினால் அதற்கான அனுமதியை தொழிற்சாலை அதிகாரியிடம் பெறவேண்டும்.அவர்களுக்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதேபோன்று வெளிமாநிலத் தொழிலாளியை பயன்படுத்துவதற்கு இடம்பெயருதல் சட்டம் 1979இன் அடிப்படையில் பதிவு செய்யப்படவேண்டும்.தொழிற்சாலை ஆய்வாளர் எப்பொழுது வேண்டுமானாலும் தொழிற்சாலையை ஆய்வு செய்ய உரிமை தற்போது வரை உண்டு. தொழிற்சாலை சட்டப்படி பரா மரிக்கப்படவேண்டிய ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றால் அத்தொழிற்சாலைமீது நடவடிக்கை எடுக்கலாம். நடவடிக்கை என்றால் பெரிய அளவில் நினைத்து விடக்கூடாது. அதிகபட்ச தண்டனை கூட மயிலிறகினால் அடிப்பது போன்று 500 ரூபாய் அபராதம் இருக்கும்.இதைக்கூட தற்போது ரத்து செய்ய மோடிஅரசு துடிக்கின்றது.அது கூட முதலாளி களுக்கு அவமானமாம்.மனம் நொந்து போய்விடுவார்களாம். அதிர்ச்சி தகவல் அதற்கு மேலாக வெளிமாநிலத் தொழிலாளியின் நிலைமை மோசம். எந்தவிதப் பதிவும் கிடையாது. கட்டுரையாளர் தனது அனுபவத்தினை பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி என்பது வெளிமாநிலத் தொழிலாளியின் கேட்வே என்று சொல்லமுடியும்.எந்த மாநிலத்தொழிலாளியும் முதலில் இங்கு வந்த பின்னால் தான் தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்குச் செல்வார்கள். அந்த அளவிற்கு வெளிமாநிலத் தொழிலாளிக்கு தங்குவதற்கு ஒரு இடமாக அது இருந்து வருகின்றது.இங்குள்ள தொழிற்சாலைகளில் ஏரா ளமான அளவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர். மிட்சுபா என்ற தொழிற்சாலையில் 66 பேர் நிரந்தரத் தொழிலாளி 1000 க்கும் மேற்பட்டவர் ஒப்பந்தத்தொழிலாளி. ஜம்போ பேக் என்ற தொழிற்சா லையில் 140 நிரந்தரத் தொழிலாளி.1300 பேர் ஒப்பந்தத் தொழிலாளி.இங்கு மட்டுமல்ல, அருகிலுள்ள ஊத்துக்கோட்டை, செங்குன்றம் பகுதிகளிலும் வேலைசெய்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எங்கெங்கு எவ்வளவு பேர்கள் வேலை செய்து வருகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பொறுப்பான இணை இயக்குநர் (தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கிண்டி) அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டேன். அவரது அலுவலகத்திலிருந்து நமக்கு கிடைத்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.மொத்தம் 12 தொழிற்சாலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அதில் வெளி மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை யை தெரிவித்துள்ளார்.அத்தனையும் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகள்தான். ஒரு ஸ்டீல் தொழிற்சாலையும் அடக்கம். இதை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ள மொத்த தொழிலாளி 1236 பேர்கள் மட்டும் தான். ஆனால் அதே கும்மிடிப்பூண்டியில் நமக்கு தெரிந்த தொழிற்சாலைகளில் மட்டுமே வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளிகள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும். பதிவும் இல்லை உரிமையும் இல்லை அப்படியென்றால் இடம் பெயருதல் சட்டம் 1979 அடிப்படையில் தொழிற்சாலை களில் வேலைசெய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவில்லை. அத்தொழிலாளிக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய ஊதியத்துடன் 75 ரூபாய் கூடுதலாக அளிப்பதும் இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர், தங்கும் ஏற்பாடு, ஆண்டுக்கு ஒரு மாதம் வீட்டிற்குச்செல்வதற்கு விடுப்புடன் சம்பளம் அளிப்பதும் இல்லை. ஆறு மாத்திற்கு மேல் தங்கும் வெளிமாநிலத் தொழிலாளிக்கு பாஸ்போர்ட் என்ற அடையாள அட்டை அளிக்கவேண்டும் என்பதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர் என்ன தான் நடக்கின்றது? அந்த தொழிலாளியை எட்டு மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர்.சென்னைக்கு அருகாமையில் உள்ள ஒரு தொழிற்சாலை நகரத்தில் இப்படி என்றால், தமிழகம் முழுவதும் கேட்கவே வேண்டாம். எந்த தொழிற்சாலையிலும் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளியை பதிவு செய்வது என்பது நடக்கவில்லை.தொழிலாளர் துறையினரால் பதிவு செய்யப்பட்டு இருக்கமாட்டார்கள். சென்னை யில் உள்ள ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர்துறை அதிகாரியிடம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வெளிமாநிலத்தொழிலாளிகள் வேலை செய்வதற்குமுதலாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளா ர்கள் என்ற விபரம் தேவை. அதனால் தமிழக அரசின் தொழிலாளர்துறையிடம் கேட்டேன். அவர்கள் மத்திய தொழிலாளர் துறைக்குத்தான் தெரியும் என்று தெரி வித்ததால் தங்களிடம் கேட்டேன்.இது ரயில்வேக்கு தேவை என்று கேட்டார். மத்தியதொழிலாளர் துறையைச்சேர்ந்த அந்த அதிகாரியோ அப்படி ஒரு பதிவு இந்த அலு வலகத்தில் இல்லை என்று சொன்னது வேடிக்கையாக இருந்தது. முதலாளிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து வேலைவாங்குவதற்கும் அனுமதி வாங்குவது தொழிற்சங்கங்களின் தலை யீட்டினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றது.ஆனால் வெளிமாநிலத் தொழி லாளி என்பது நிர்வாகங்களால் பதிவு செய்யப்படுவதில்லை. தொழிற்சாலைக்குள் தங்க வைத்தல் தமிழக பொதுத்துறை நிறுவனமான மின்வாரியத்திற்கு சொந்தமான வடசென்னைஅனல் மின்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளி நிலக்கரி கையாளும் பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளிக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் இதர பிரச்சனைகளுக்காக சங்கம் சேர்ந்து போராடுகின்றபோது அவர்களை நிர்வாகம் வேலையைவிட்டு நீக்குவது நடக்கின்றது.அந்த இடத்தில் வெளிமாநிலத் தொழிலாளியைக்கொண்டு வேலை செய்வதும் முதலாளிகளால் செய்யப்படு கின்றது. இதற்காக வெளிமாநிலத் தொழிலாளிகள் தொழிற்சாலைக்குள் தங்க வைக்க ப்படுகின்றனர். ரேசன் அரிசியும் தகரக் கொட்டகையும் தான் தொழிற்சாலைக்குள் அவர்களுக்கு நிர்வாகம் செய்த ஏற்பாடு. தொழிற்சாலையை ஆய்வு செய்யும் அதிகாரிகளிடம் புகார் கூறினால் தொழிற்சா லைக்குள் தங்கவைக்கக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை என்கிறார்கள்.இடம் பெயருதல் சட்டத்தை அமல்படு த்திடவேண்டும் என்று புகார் தெரிவித்தபோது தொழிற்சாலைத்துறை அளிக்கும் பதில் உங்கள் புகாரில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் எல்லாம் நிரந்தரத் தொழிலாளர்கள் ஆக நிர்வாகம் உத்தரவு போட்டுவிட்டது.ஆகவே இடம் பெயருதல் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உள்ளூர்த் தொழிலாளர்களிடம் வெளிமாநிலத் தொழிலாளியின் மீது இயல்பாகவே ஒரு வெறுப்பினை தமிழக அரசே உருவாக்குகின்றது. கொள்ளை லாபம்... சிறிய அன்பளிப்பு... தொழிற்சாலைகளில் இப்படி பத்தாயிரக்கணக்கில் வெளிமாநிலத் தொழி லாளியை முதலாளிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்துவதால் அத்தொழிலாளிக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டியதில்லை.கூடுதலான பணிக்கு எல்லாம் சேர்த்து குறைந்த பட்ச ஊதியத்திற்கு சற்று அதிகமாகக் கிடைக்கின்றது. வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் எல்லாம் முதலாளிக்கு மிச்சம். தொழிற்சங்கம் அமையாமல் இருக்க தொழிலாளர்களை மிரட்டுவதற்கு ஒரு ஆயுதமாக இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் முதலாளிகளுக்கு அபரிமிதமான லாபம். அந்த லாபத்தில் சட்டத்தை, அமலாக்கவேண்டிய அதிகாரிகளுக்கு சிறிய அன்பளிப்புகள். மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தொழிற்சாலையை ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ள சட்டங் களை நீர்த்துப் போகச்செய்ய பலதிருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. பாஜக ஆளும் மாநில அரசுகள் மத்திய அரசிற்கு ஏற்ற வகையில் மாநில அரசின் மூலம் சட்டங்களை தொழிலாளர் நலனுக்கு எதிராக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றன. எட்டை ஒன்றாக்கிய பாஜக ஆட்சி மத்திய அரசின் தொழிலாளர்துறை தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு அளித்த சுற்றறிக்கையில் தொழி லாளர்களின் நலன்சார்ந்த பிரச்சனை களுக்கு தனித்தனியாக பதிவேடுகள் பரா மரிக்கவேண்டியதில்லை என்றும் தொழிலாளர் நலன் சார்ந்த எட்டு பதிவேடுகளையும் ஒரே பதிவேடாக பராமரித்தல் போதும் என்றும்தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் வரமாட்டார்கள் என்றும் தெரிவித் துள்ளது. அதேபோன்று தமிழகத்தில் உள்ளவருங்கால வைப்பு நிதி துறை அதிகாரி களும் தொழிற்சாலைக்கு சென்று வருங்கால வைப்பு நிதி தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யக்கூடாது என்று தனது அதிகாரி களுக்கு உத்தரவு போட்டுள்ளது. அதனால் தொழிலாளிகள் தனக்கு பிஎப் பிடிக்கவில்லை என்று ஆதாரத்துடன் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.தமிழக அரசு, மத்திய அரசு கொண்டு வர உள்ள தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை ஏற்கவில்லை என்றாலும் அது இப்பொழுது பல்வேறு ரூபத்தில் நிறைவேற்றப் படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இவைகள் மாநில அரசிற்கு தெரிந்து நடக்கின்றதா? இல்லை எனில் தமிழக அரசுஇதுதொடர்பாக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? தமிழக அரசு, மத்திய அரசு கொண்டுவர உள்ள தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை ஏற்கவில்லை என்றாலும் அது இப்பொழுது பல்வேறு ரூபத்தில் நிறைவேற்றப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
