This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 9, 2017
ஆதார்: உணர மறுக்கும் அரசு ‘‘எல்லாவற்றிற்கும் ஆதார் எண் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், உண்மையிலேயே மானியம் தேவைப்படும் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உணர மறுக்கிறது.ரயில் பயண முன்பதிவுக்கு ஆதார் எண் குறிப்பிட வேண்டும் என்பது உலகில் எந்த நாட்டிலுமே கேள்விப்படாத நடைமுறை. வெளிநாட்டினர் ஒருவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது என்ன செய்வார்? ஏறத்தாழ பத்து அரசு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அவை அனைத்துமே மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், அடித்தட்டு வர்க்கத்தினர் தொடர்பானவை. அவர்களில் பலருக்கும் இன்னும்கூட ஆதார் அட்டை குறித்த விவரமே தெரியாது.குழந்தைகளுடைய நிலைமைதான் மிகவும் மோசம். அவர்களில் பலரும் படிப்பறிவில்லாத பெற்றோரின் வழிகாட்டுதலில் வாழ்பவர்கள். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும் அவர்களது ஆதார் அட்டை புதுப்பிக்கப்படவும் வேண்டும். பெற்றோர் படிப்பறிவில்லாத ஏழைகளாகவும், எந்தவித முகவரி ஆதாரமுமில்லாத இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்களாகவும் இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு ஆதார் எண் பெற முடியாது. அவர்கள் கல்வி கற்கவும் முடியாது, அரசின் உதவிகளைப் பெறவும் முடியாது.ஆதார் அட்டை வழங்குவது என்பது குடும்ப அட்டை வழங்குவதுபோல, தங்குவதற்கு வீடோ, குறைந்தபட்சம் குடிசையோ இருந்தால்தான் தரப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பல லட்சம் பேர் தங்களது கிராமங்களில் விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களில் கூலி அல்லது கட்டடத் தொழிலாளிகளாகத் தெருவோர வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே மானியம் தேவைப்படுபவர்கள். ஆனால், அவர்களிடம் ஆதார் அட்டை இல்லாததால் அரசின் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை, ஆதார் எண் எந்தவொரு திட்டத்திலும் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது." - தினமணி (மார்ச் 9) தலையங்கத்தின் பகுதிகள் http://epaper.theekkathir.org/
Labels:
AADHAR CARD
