SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 7, 2017

பெண் உழைப்பாளிகளைக் காப்போம் மாலதி சிட்டிபாபு இந்தியாவில் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மிகமிக சொற்பக்கூலி பெற்றுக் கொண்டும் ஒப்புக்கொண்ட ஊதியத்தைக் கூட பெறாமலும் கடும் சுமைகளோடும் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்கள் வீடு சார்ந்த துறைகளில் பணியாற்றும் உழைக்கும் பெண்கள் ஆகியோரது கடுமையான உழைப்பு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.அரசு புள்ளி விபரப்படி பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் எண் ணிக்கை விகிதம் அதிர்ச்சியளிக்கக் கூடியவிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வீடுகளைப் பராமரிக்கும் வேலை அதிகரித்துள்ளது. கண்ணியமான வேலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் முடங்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சமையல் செய்வது, குழந்தைகளை பராமரிப்பது, வயதானவர்களை கவனிப்பது, தோட்ட வேலை, தண்ணீர் எரிபொருள் சேகரிப்பது, வீட்டு விலங்குகளை பாதுகாப்பது போன்ற பணிகளை ஊதியமில்லாமல் செய்து வருகின்றனர்.அரசாங்கங்கள் நாட்டிற்காக மேற்கொள்ளும் ஏரிகள், குளங்கள், கண்மாய் கள், கால்வாய்கள், சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றிற்கு தேவையான அஸ்திவாரப் பணிகளில் ஜோடி ஜோடியாக கணவனும் மனைவியும் குழந்தைகளும் என குடும்பம் குடும்பமாக ஈடுபடுகின்றனர். இவர்கள் பெறுவதோ மிக மிக சொற்ப கூலி. ‘பீஸ் ரேட்’ அடிப்படையில், தோண்டுவதற்கு ஏற்ப மொத்தக்கூலி. மனைவியும் பெண் குழந்தைகள் என பெரும்பாலும் பெண்கள் தான் இதில் அதிக எண்ணிக்கையில் ஈடுபடும் அவலம். ஊட்டச்சத்து, சத்துணவு, சுகாதார சேவை மையம் போன்ற திட்டப்பணிகளில் ஈடுபடுவோர் ‘தொழிலாளிகளாக’ அங்கீகரிக்கப் படுவதில்லை. குறைந்தஊதியம் மற்ற சலுகைகள் கிடைப்பதில்லை. தன்னார்வ தொண்டர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.சுய வேலைவாய்ப்பு என்ற பெயரில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பணிபுரிகின்றனர். நடைபாதை வியாபாரிகளாக, விற்பனையாளர்களாக, சிறு சிறுடீக்கடைகள், பழுதுபார்க்கும் கடைகள்நிறுவிக்கொண்டும் அனேகமாக பெண் கள் ஊதியமில்லா பணியாளர்களாக பணிபுரிகின்றனர். குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் குடும்பங்களில், குப்பைகளை சுத்தம் செய்து வகை வகையாக பிரிக்கும் பணிகளில் பெண்கள் தெருக்களில் திறந்த வெளியில் பணிபுரியும் அவலத்தில் உள்ளனர்.ஆட்டோமொபைல் கணினி இயந்திரத்தில் உதிரிபாகங்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் உபகருவிகள் வீடுகளிலிருந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.இன்றைய நிலைமையில் பெண் தொழிலாளர்கள் கண்ணியமான வேலையும் தேவைக்கேற்ற ஊதியமுமின்றி பாதுகாப்பின்றி பணிபுரிகின்றனர் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தான் இவை.‘கண்ணியமான வேலை கௌரவமான ஊதியம்’ என்பது நமது மைய கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது அனைத்து அம்சங்களிலும் பெண்களின் தரமான வேலைவாய்ப்புடன் தொடர்புடையது. மகத்தான நவம்பர் புரட்சியின்நூற்றாண்டுடன் இணைத்து இன்றைய சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தைஅனுசரித்து சோஷலிச சமுதாய அமைப்பில் தான் அனைவருக்கும் தரமான வேலைவாய்ப்பு உத்தரவாதப் படுத்தப்படும். இன்றைய ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் கொள்கைகள் மேலும் மேலும் வேலையின்மையையும், துயரத்தையும் தான் அதிகரிக்க செய்யும்.இந்த அம்சத்தை வலியுறுத்தி "பெண் களின் வேலைவாய்ப்பும், ஆளுமையும்" என்கின்ற தலைப்பில் இந்த ஆண்டு உழைக்கும் பெண்கள் தினத்தை அனுசரிக்க சிஐடியு அறைகூவல் விடுத்துள் ளது.பணியும் ஆளுமையும் என்கின்ற மைய கோரிக்கைகளோடு - சம வேலைக்கு சம ஊதியம், பணித்தளங்களில் பாதுகாப்பு, கௌரவமான ஊதியம், கண்ணியமான பணி, மகப்பேறு சலுகைகள், பணியிடங்களில் அடிப்படை வசதிகள், பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பதவி உயர்வில் வாய்ப்புகள், குழந்தைகள் காப்பகம் போன்ற கோரிக்கைகளையும் பெண் உழைப்பாளிகள் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு செல்வோம். - கட்டுரையாளர்: சிஐடியு மாநில பொருளாளர்