SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, March 6, 2017

THEEKATHIIR: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடைவிதித்து அரசாணை தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் சென்னை, மார்ச் 6- நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடைவிதித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மூன்று வார காலமாக மக்கள் ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நிலவளம், நீர்வளம், வாழ்வாதாரம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் உறுதியாக போராட்டத்தை தொடர் கின்றனர். நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதலமைச்சரை நேரில் சந்தித்த போது திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காது என்று வாய்மொழியாக உறுதிமொழி கொடுத்துள்ளாரே தவிர, எழுத்துப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை அரசு வெளியிடவில்லை.ஏற்கெனவே காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அனுமதிஅளிக்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, மீத்தேன் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய ஒருநிபுணர் குழுவை அமைத்ததுடன், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடைவிதித்து 2013 ஆம்ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார். இதன்விளைவாக இப் போது வரை அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள் ளதை சுட்டிக்காட்டுகிறேன். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென்று மாநிலஅரசு வற்புறுத்த வேண்டும். அதேநேரத்தில் போராடும் மக்களுக்கு நம் பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்து உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.