This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Tuesday, March 7, 2017
உழைக்கும் மாதர்களுக்கு புரட்சியும் மகளிர் தினமும் தோழர்களே, தொழிலாளிவர்க்கத்தினிடையே கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதை மாஸ்கோ சோவியத்துக்கு நடைபெற்ற தேர்தல்கள் காட்டுகின்றன.உழைக்கும் மாதர்கள் தேர்தலில் இன்னும் கூடுதல் பங்காற்ற வேண்டும். மாதர்களை ஆண்களுக்குக் கீழான நிலையிலும், ஆண்களை - உதாரணமாக, திருமணத்தைச் சார்ந்த உரிமைகள், குழந்தைகள் சம்பந்தமாகத் தனிச் சலுகை படைத்த நிலையிலும் வைத்த, பழைய வெறுக்கத்தக்க பூர்ஷுவா சட்டங்கள் அனைத்தையும் முழுமையாகஒழித்துக் கட்டிய உலகிலேயே முதலாவது சர்க்கார், ஒரே ஒரு சர்க்கார் சோவியத்சர்க்கார் மட்டுமேயாகும். சொத்துப் பிரச்சனைகளில் ஆண்களின் தனிச் சலுகைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டிய முதலாவது சர்க்கார் , ஒரே ஒரு சர்க்கார், உலகிலேயே உழைப்பாளி மக்களின் சர்க்காரான சோவியத் சர்க்கார் மட்டுமே - திருமணம், குடும்பம் சம்பந்தப்பட்ட சட்டங்கள் சகல பூர்ஷுவா குடியரசு களிலும், மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலும் கூட இன்னும் இந்த தனிச் சலுகைகள் பேணிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன.எங்கெங்கு நிலப்பிரபுக்களும், முதலாளிகளும், வியாபாரிகளும் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பெண்கள் ஆண்களுடன் சமமான நிலையில் - சட்டத்தின் முன்பு கூட - இருக்க முடியாது.நிலப்பிரபுக்கள், முதலாளிகள் அல்லது வியாபாரிகள் எங்கு இல்லையோ, எங்கு உழைப்பாளி மக்களின் சர்க்கார் இந்த சுரண்டலாளர்கள் இல்லாமல் ஒரு புதிய வாழ்க்கையை நிர்மாணித்து வருகிறதோ அங்கு ஆண்களும், பெண்களும் சட்டத்தின் முன் சம நிலையில் உள்ளனர்.ஆனால் அது மட்டும் போதாது.சட்டத்தின்முன் சமத்துவம் என்றால் உண்மையாகவே சமத்துவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.உழைக்கும் பெண் உழைக்கும் ஆணுக்குச் சட்டத்தின் முன் மட்டுமின்றி, நடைமுறையிலும் சம அந்தஸ்து உள்ளவளாக இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதற்கு சமூக உடைமையாக்கப்பட்ட நிலையங்களின் நிர்வாகத்திலும், அரசின் நிர்வாகத்திலும் உழைப்பாளிப் பெண்கள் மென்மேலும் அதிகப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.நாட்டின் நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் மாதர்கள் விரைவில் கற்றுத் தேர்ந்து ஆண்களை எட்டிப் பிடிப்பார்கள்.சோவியத்துக்குக் கூடுதலான உழைப்பாளிப் பெண்களை கம்யூனிஸ்டுப் பெண்கள், கட்சி சார்பில்லாத பெண்கள் இரு தரப்பாரையும் -தேர்ந்தெடுங்கள். தமது வேலையை அறிவார்ந்த முறையிலும், உணர்வுப் பூர்வமாகவும் செய்ய வல்ல நாணயமான உழைப்பாளிப் பெண்களாயிருக்கின்ற வரையிலும் அவர்கள் கட்சி உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் கூட, அவர்களை மாஸ்கோ சோவியத்துக்குத் தேர்ந்தெடுங்கள்!மாஸ்கோ சோவியத்துக்கு அதிகமான உழைப்பாளிப் பெண்களை அனுப்புங்கள். மாஸ்கோ தொழிலாளி வர்க்கமானது, வெற்றிக்காகப் போராடுவதற்கு, பழைய அசமத்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, பெண்களை இழிவுபடுத்தும் பழைய பூர்ஷுவா போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு சகலமும் செய்வதற்குத் தயாராயிருப்பதாகவும், சகலமும் செய்து வருவதாகவும் எடுத்துக் காட்டட்டும்.மாதர்கள் பூரண விடுதலையை வென்று பெறாதவரையிலும் தொழிலாளிவர்க்கம் பூரண விடுதலையை அடைய முடியாது.பிப்ரவரி, 21, 1920- லெனின்பிராவ்தா - இதழ் 40பிப்ரவரி, 22, 1920, தொகுப்பு நூல்கள் பாகம் 30 http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
