This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 13, 2017
கட்ட அல்ல, இடிக்கத் துடிக்கிறார்கள் அயோத்தியில் பாபர் மசூதியை சட்ட விரோதமாக இடித்ததன் மூலம் நாட்டில் மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டது ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம். பாபர் மசூதியை இடித்தது தொடர்பான வழக்கில் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்பட வில்லை. எல்கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறதா என்பதே சந்தேகமாகஉள்ளது. மறுபுறத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் பாஜகவினர் அயோத்தியில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவோம் என்றுகூச்சலிட்டு வருகின்றனர். உ.பி,யில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் இந்தக் கூச்சல்அதிகரித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில்கட்டுவதற்காகத்தான் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.பாஜகவின் கூட்டாளியான சிவசேனை, ராமர்கோவில் கட்டும் பணியை பாஜக அரசு உடனடியாக துவக்க வேண்டும் என்று உசுப்பேற்றி விட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும் என்றும் சிவசேனை கூறியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, தாம் வகிக்கும் பொறுப்புக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் வெளிப்படையாகவே இஸ்லாமிய மக்களுக்கெதிராக விஷ வெறுப்பைக் கக்கினார். அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அதைமேலும் முன்னெடுத்தார். இந்தப் பின்னணியில்தான் அயோத்தி பிரச்சனையை ஆர்எஸ்எஸ் -பாஜக பரிவாரம் மீண்டும் ஊதிப் பெரிதாக்க முயல்கிறது. அயோத்தியில் மட்டுமல்ல, காசி, மதுரா போன்ற இடங்களிலும் கோயில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதையும் இடிப்பது தங்களுடைய நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்றும்பாஜகவின் துணை அமைப்பான விஎச்பி கூறி வருகிறது. உச்சநீதிமன்றம் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோல்வியடையுமானால் மத்திய அரசு இதற்காக தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் வைத்யா கூறியுள்ளார். உ.பி.யில் பாஜக வெற்றிபெற்றிருப்பதன் மூலம் வலதுசாரித் தாக்குதல்அதிகரிக்கும் என்ற அச்சத்தை உறுதிப்படுத்துவதாகவே ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரத்தினரின் பேச்சுகள் உள்ளன. சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தனிச்சட்டம் இயற்றி கோவில் கட்டுவோம் என்று சொல்வது இந்திய நீதித்துறையை சவாலுக்கு இழுப்பதாகும். அரசியல் சாசனத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் அதனைத் தகர்க்க முயல்வது ஆபத்தானது. இத்தகைய வெறிப்பேச்சுகள் இந்திய அரசியல் சாசன கட்டுமானத்தை மட்டுமின்றி, தேசத்தின் அடிப்படையையே தகர்த்துவிடும் ஆபத்து கொண்டதாகும். மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மேலும் மேலும் மக்களை அணிதிரட்டுவதன் மூலமே வலதுசாரி பயங்கரவாதிகளிடமிருந்து தேசத்தைப் பாதுகாக்கமுடியும். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
